திமுகவினரின் மது ஆலைகள் வருமானம் பெருக்க இந்த திட்டமா.! ஓங்கி அடித்த அண்ணாமலை.!!

By Raghupati R  |  First Published Apr 24, 2023, 1:09 PM IST

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், “திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம். மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். 

சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தது. F. L. 12 என்ற லைசன்ஸுக்கான கட்டணம் அரசிதழில் இடம்பெற்றுள்ளது. மது அருந்துவது என்பது பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே அனுமதியுடன் இயங்கி வந்தது. 

Tap to resize

Latest Videos

பிற பொது இடங்களில் மதுபானங்களை குடிக்க தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பல இடங்களில் திருமண மண்டபங்களில் bachelors party என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக மது விருந்து வைக்கப்பட்டு வருகிறது. இதை முறைப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன. 

அது போல் காலி இடங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் பலர் கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஒரு நாள் நடத்தும் விழாவாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற்று சிறப்பு கட்டணம் செலுத்தி மது விருந்து அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுபற்றி ட்விட்டரில், கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.  

இதையும் படிங்க..குடும்பத்தினர்களுக்கு மட்டும் டெண்டர்! இலவச லேப்டாப் குளறுபடி.! அதிமுக ஆட்சி பற்றி சிஏஜி அதிர்ச்சி தகவல்.!

மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்டது. 

இந்த நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.  உடனடியாக இந்த அரசாணையைத்  திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க..கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!

click me!