செம்ம ஸ்பீடில் இந்து அறநிலையத்துறை.. ஆன்லைன் மூலம் குவியும் புகார்கள், கோரிக்கைகள்.. அதிகாரிகள் பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 9:58 AM IST
Highlights

இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைகள் தொடர்பான ஆவணங்களையும் இணையதளத்தில் சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

கோரிக்கைகளை பதிவிடுக என்ற இணைய வழி திட்டம் மூலம் இதுவரை 3401 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக " கோரிக்கைகளை பதிவிடுக " என்ற புதிய இணையதளம் கடந்த மே மாதம் 24ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைகள் தொடர்பான ஆவணங்களையும் இணையதளத்தில் சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கோரிக்கைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் அந்த மனுக்கள் மீது 60 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இணையதளம் தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரையில் கோரிக்கைகளை பதிவிடுக என்ற இணைய வழி திட்டம் மூலம் 3401 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 

இதில் பெரும்பாலும் திருக்கோவில் திருப்பணிகள் புதுப்பித்தல், ஆக்கிரமிப்புகள் மீட்பு, கோவில் பணியாளர்களுக்கான ஊதியம் குறைவு, மனைகளின் வாடகை உயர்வு தொடர்பாகவே இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், புகார்கள் தொடர்பாக மண்டல வாரியான அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து புகார்களையும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

click me!