BREAKING சசிகலாவுக்கு அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல்... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

Published : Jan 20, 2021, 06:50 PM IST
BREAKING சசிகலாவுக்கு அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல்... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

சுருக்கம்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 4 வருடம் சிறைத்தண்டனை நிறைவடைந்ததையடுத்து  வரும், 27ம் தேதி சசிகலா விடுதலையாக உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சசிகலாவுக்கு இன்று காலை அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்,  மருத்துவர்கள் அறிவுரைப்படி, சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங்கா அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!