ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா: 3 பேர் மீது வழக்கு தொடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சராமாரி கேள்வி...

Asianet News Tamil  
Published : Jun 23, 2017, 06:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா: 3 பேர் மீது வழக்கு தொடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சராமாரி கேள்வி...

சுருக்கம்

High court raise question to tn govt on money distributed in RK Nagar

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா சிக்கலாக மாறி வருகிறது. தேர்தல் ஆணையம் 3 பேர் பெயர்களை குறிப்பிட்டும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி எழுப்பினர்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆர்.கே. நகரில் ஆங்காங்கே பணப்பட்டுவாடா செய்ப்பட்டது குறித்த வீடியோ காட்சியும் வெளியானது. இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையம், ஆய்வு செய்து ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை தள்ளி வைத்தது.

இதனிடையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணா, எம். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா சம்பந்தமாக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. 

தாங்கள் முறையாக விசாரணை நடத்தி பணப்பரிமாற்றத்தை பறிமுதல் செய்தும், 3 பேர் பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம். முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்திருந்தனர்.

தமிழக அரசு சார்பில், சி.டி. ஃபைல் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டையும் படித்து பார்த்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயண, எம். சுந்தர், அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியிடம் சராமரியாக கேள்வி எழுப்பினர்.

வருமான வரித்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனைகள் எந்தெந்த இடங்களில் இடம் பெற்றது என்பது குறித்து கேட்டனர். மேலும் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தொலைபேசி எண்கள் ஏன் குறிப்பிடவில்லை என்றும், அரசு தரப்பு வழக்கறினரிடம் நீதிபதிகள் கேட்டனர். 

தேர்தல் ஆணையம் பிராமண பத்திரத்தில் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 3 பேரின் பெயர்களை ஏன் 

குறிப்பிடவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் நீங்கள் பதிவு செய்த வழக்கில், அந்த 3 பேரின் பெயர்களைக் குறிப்பிடாமல் காலியாக விடப்பட்டது ஏன் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

Vijay Set Hit Back: 5 வருடம் 5 முதலமைச்சர்.! சீமான் உள்ளிட்டோரை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம் ரெடி.! அடித்து ஆட தொடங்கும் விஜய்.!
நம்பிக்கையில்லா தீர்மானம்... சபாநாயக ஓம் பிர்லா எடுத்த மிக முக்கிய முடிவு