
கூவத்தூரில் வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ க்களுக்கு பணமும், தங்கமும் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு, அதனால் சட்டப்பேரவையிலும் கடும் அமளி ஏற்பட்டது.
அதிலும் அதிமுக எம்.எல்.ஏ க்களை விட, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற எம்.எல்.ஏ க்களுக்கு கூடுதலாக பணம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ தனியரசு, சட்டமன்றத்திற்கு காரில் வருவதை தவிர்த்து பைக்கில் வர ஆரம்பித்துள்ளார்.
சட்டமன்றத்துக்கு வரும் எம்.எல்.ஏ.-க்கள் பெரும்பாலும் காரிலும், ஒருசிலர் அரசு ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு பேருந்துகளிலும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருந்து வருவார்கள்.
ஆனால், கூவத்தூரில் 10 கோடி ரூபாய் வாங்கியதாக சொல்லப்படும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. தனியரசு மட்டும் தனது பைக்கில் சட்டமன்றத்துக்கு வந்து போகிறார்.
கார் இருந்தாலும் அவர் அதில் வருவதில்லை. அவர் கூவத்தூரில் ஏற்கெனவே நான் 10 கோடி வாங்கிவிட்டார் என்று கூறுவதால், காரில் வந்தால், அந்த பணத்தில்தான் கார் வாங்கியதாக கூறுவார்கள்.
அதனால்தான் பைக்கில் வந்து செல்கிறேன் என்று கூறும் தனியரசு, அதற்காக ஊரில் இருந்து பைக்கை சென்னைக்கு எடுத்து வந்ததாகவும் கூறுகிறார்.
ஆனால், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ க்களுக்கு கார் பார்க்கிங் வசதி மட்டுமே இருப்பதால், அங்கே பைக்கை நிறுத்துவதற்கு அவர் படாத பாடு படவேண்டி இருக்கிறது.
பைக்கில் வந்தால், பணம் வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யாகும் என்ற லாஜிக்கை அவர் எங்கு கண்டு பிடித்தார்? என்று தெரியவில்லை என்றே மற்ற எம்.எல்.ஏ க்கள் கூறுகின்றனர்.