
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தின், அதிமுக விவகாரம் குறித்து கேட்டபோது, அதிமுகவில் பொது செயலாளரே கிடையாது. பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றுதான் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். இடம் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது பற்றியும், பொது செயலாளர், இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், நாங்கள், எங்களுடைய பிரமாணப் பத்திரத்தில் இரண்டு விஷயங்களைத் தெரிவித்துள்ளோம். அதிமுகவில் பொது செயலாளர் நியமன முறை செல்லாது. முறைப்படி பொது செயலாளர் தேர்தல் நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
ஆனால், எடப்பாடி சசிகலா தரப்பில், அவர்களுக்குள் மோதிக் கொண்டாலும், ஓரே அஃபிடவிட்டில் கையெழுத்திட்டு போட்டு இருவரும் தருவது, அவர்கள் நடத்துவது நாடகமே என்பது தெளிவாகிறது.
அதிமுகவில், ஒரு அசாதாரணமான சூழ்நிலையில், தற்காலிக பொது செயலாளரைக் கொண்டு வந்தோம். ஆனால், அதிமுகவில், பொது செயலாளரே கிடையாது.
பொது செயலாளர் முறைப்படி தேர்வு செய்யப்பட வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.