
கியா மோட்டார்ஸ் வேறு மாநிலத்திற்கு சென்றதால் ரூ. 7,000 கோடி முதலீடு போனது என்ற திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவின் குற்றசாட்டுக்கு கொள்கை காரணமாகவே கியா மோட்டார்ஸ் ஆந்திரா சென்றது என அமைச்சர் தங்கமணி விளக்கமளித்தார்.
மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் தொடர்பாக சட்டப்பேரவை இன்று கூடியது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா அதிமுக அரசு மேல் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார்.
அப்போது, கியா மோட்டார்ஸ் வேறு மாநிலத்திற்கு சென்றதால் ரூ. 7,000 கோடி முதலீடு போனது எனவும், மோனோ ரயில் திட்டம் என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி கியா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம் தமிழகத்தில் உள்ளதாகவும், தமிழகத்தில் நிறுவனம் உள்ளதால் தான் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திரா சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிறுவனத்தின் கொள்கை காரணமாகதான் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்றதாக குறிப்பிட்டார்.
சேலம் செகோசர்வ் சங்கத்தில் ரூ.25 லட்சத்தில் மின்னணு ஏல மையம் அமைக்கப்படும் எனவும், சேலம் செகோசர்வ் ஆய்வகம் ரூ.17.50 லட்சத்தில் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.