"கட்சியே எங்களிடம்தான் உள்ளது... அப்புறமென்ன இபிஎஸ் உடன் இணைப்பு?" - ஓ.பி.எஸ். கிண்டல்

Asianet News Tamil  
Published : Jun 23, 2017, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
"கட்சியே எங்களிடம்தான் உள்ளது... அப்புறமென்ன இபிஎஸ் உடன் இணைப்பு?" -  ஓ.பி.எஸ். கிண்டல்

சுருக்கம்

ops criticizing eps team

டெல்லிக்கு இரு அணிகள் இணைப்புக்காக வந்தீர்களா என்ற கேள்விக்கு நாங்கள்தான் கட்சியே. இ.பி.எஸ். அணியுடன் என்ன இணைப்பு என்று ஓ.பி.எஸ். கிண்டலடித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக, ராம்நாத் கோவிந்த்-யை நிறுத்தி உள்ளது. ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் 3 அணிகளும் போட்டிபோட்டு ஆதரவு அளித்துள்ளனர்.

இன்று ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி, வேட்புமனுவில் கையெழுத்திட எடப்பாடி, ஓ.பி.எஸ். தனித்தனியாக டெல்லி சென்றனர்.

டெல்லிக்கு, இரு அணிகளையும் வரவழைத்து பாஜக இணைப்பு முயற்சி எடுத்ததாக கூறப்பட்டது. இது பற்றி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். இடம் இணைப்பு பற்றி கேட்டபோது, கட்சியே எங்களிடம்தான் இருக்கிறது. ஆட்சி மட்டுமே அவர்களிடம் உள்ளது. இதில் எங்கே இணைப்பு? எங்களிடம்தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். நாங்கள்தான் அதிமுக என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!