முதல்வர் உடல்நிலை குறித்து குழு அமைத்து அறிக்கை கேட்டு வழக்கு – மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 02:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
முதல்வர் உடல்நிலை குறித்து குழு அமைத்து அறிக்கை கேட்டு வழக்கு – மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து குழு ஒன்றை அமைத்து, ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும் என பிரவீனா என்பவர் தொடர்ந்த வழக்கில், மனு ஏற்க தகுந்த்து அல்ல என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி, உடல்நலக்குறைவால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம், தேறி வரும் நிலையில் அவரது உடல்நிலைகுறித்து பல்வேறு அவதூறு வதந்திகள், பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த பிரவீனா என்பவர், குடிமகள் என்ற முறையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தனக்கு, தெரியவேண்டும் என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கை தொடர்ந்தார்.

அந்த மனுவில் முதலமைச்சர் உடல்நிலைல குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிறது. அவரது உடல்நிலை குறித்து அரசு டாக்டர்கள், நீதிதுறையை சேர்ந்த ஒருவர், நெருங்கிய உறவினர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து, முதலமைச்சர் உடல்நிலை குறித்து, ஆராய்ந்து ஒரு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

சிகிச்சைக்காக முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்பது குறித்தும், விளக்கப்பட வேண்டும். முதல்வரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள குடிமக்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதைபற்றி கருத்து தெவித்த நீதிபதிகள், முதலமைச்சர் உடல்நிலை குறித்து எந்த மாதிரி அறிக்கை வெளியிட வேண்டும் என்பது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே தெரியும். ஆகவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல. என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கை தொடுத்த சேலத்தை சேர்ந்த பிரவீனா, ஏற்கனவே ஆர்.கே.நகரில் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி, வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த வாரம் டிராபிக் ராமசாமி, முதலமைச்சர் உடல்நிலை குறித்து அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை, சுய விளமபரத்துக்காக தாக்கல் செய்யக்கூடாது என இதே முதன்மை அமர்வு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!