நிறைவடைந்தது திமுக வேட்பாளர் நேர்காணல் - கருணாநிதியுடன் ஸ்டாலின் ஆலோசனை

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 02:03 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
நிறைவடைந்தது திமுக வேட்பாளர் நேர்காணல் - கருணாநிதியுடன் ஸ்டாலின் ஆலோசனை

சுருக்கம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட திமுக வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலின் ஆலோசைன நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், அதிக வாக்குகளை பெறும் வகையில் வேட்பாளர்களை நிறுத்துவது, பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், 3 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களில் 23 பேரிடம் திமுக பொருளாளர் ஸ்டாலின், அன்பழகன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினர்.

இந்த நேர்காணல் முடிவடைந்ததையடுத்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் துரைமுரகன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ்..! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் தொடங்கியதா?
NEET Protest: களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல..!