ரெய்டு எதிரொலியின் முதல் ஸ்டெப்..! சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை..!

First Published Nov 16, 2017, 4:40 PM IST
Highlights
high court gave judgement 5 yrs jail to sasikala relation baskaran


முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான பாஸ்கரனும், அவரது மனைவியும் 1988 முதல் 97 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. 1998ல் வழக்குப்பதிவு செய்தது.

இத்தனை ஆண்டுகளாக  பாஸ்கரன் ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சீதளாதேவி 3 மாதங்களுக்கு ஒருமுறை அதே கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டு  நிபந்தனை  ஜாமீனில் வெளிவந்தனர் 

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசி உறவினரான பாஸ்கரனுக்கு  5 ஆண்டு கால சிறை தண்டனை  விதித்து ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய பாஸ்கரன்  சசிகலாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது வருமானத்தை விட அதிகமாக 1.68  கோடி அதிகமாக சொத்து குவித்ததாக   பாஸ்கரன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது  

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம்  பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறை விதித்தது.

இதனை தொடர்ந்து, தீர்ப்பிற்கு எதிராக சென்னை ஐ கோர்ட்டில் ரிசர்வ் வங்கி பாஸ்கரன் மேல்முறையீடு செய்தார். பாஸ்கரனின் மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் 5 ஆண்டு  சிறை தண்டனையை உறுதி செய்தது.

பாஸ்கரனின் மனைவி ஸ்ரீ லதாவிற்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை  உறுதி செய்யப்பட்டது . சசிகலாவின் அக்கா மகள் ஸ்ரீ லதா தேவியின் கணவர்தான் ரிசர்வ் வங்கி பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது    

இதனை தொடர்ந்து பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி ஸ்ரீ லதா தேவி இருவரும் நீதிமன்றத்தில்  சரணடைய  உயர்நீதிமன்றாம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

click me!