ஐய்யய்யோ அதுக்குள்ள 3வது அலை வந்துடுச்சே.? அட ஆண்டவா.. கேரளாவில் மின்னல் வேகத்தில் உயரும் வைரஸ் தொற்று.

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2021, 12:29 PM IST
Highlights

இதற்கிடையில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு இருக்கிறது எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில சுகாதாரத்துறை எடுக்க வேண்டுமெனவும் ஐ சி எம் ஆர் வலியுறுத்தி வருகிறது. 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வரத்  தொடங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் கேரளாவில் திடீரென வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மூன்றாவது அறையின் அறிகுறியாக இருக்கக்கூடுமோ என்ற அச்சமும், பதற்றம் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக சுற்றி சுழன்றடித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிக அதிக அளவில் உயிரிழப்பையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் கடுமையாக பாதித்துள்ளது. பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இரண்டாவது அலை கட்டுக்குள் வர தொடங்கியதை அடுத்து. நாடு முழுவதும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு இருக்கிறது எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில சுகாதாரத்துறை எடுக்க வேண்டுமெனவும் ஐ சி எம் ஆர் வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நிலை காணப்படுகிறது. இதனால் தென்னிந்தியாவில் நோய்த்தொற்று விகிதம் 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39 ஆயிரத்து 97 பேருக்க வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரை நாட்டின் மொத்த பாதிப்பு 3 கோடியே 13 லட்சத்து 32 ஆயிரத்து 159 அதிகரித்திருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் வைரஸ் வேகமாக குறைந்து வந்த நிலையில், தற்போது அது மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. பக்ரீத் பண்டிகைக்குப் பின்னர் அங்கு தொற்று எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அங்கு கடந்த  வியாழக்கிழமை 12,818 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர், அதேநேரத்தில் நேற்று ஒரே நாளில் அங்கே 17 ஆயிரத்து 118 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு சதவீதம் 13. 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் இரண்டாவது அலை குறைந்ததன் அடிப்படையில் அங்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளே நோய்த்தொற்று அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. எனவே மீண்டும் அதிகாரி மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 146 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் மூன்றாவது அலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரளாவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருவது பீதியடைய வைத்துள்ளது. இது மூன்றாவது ஆலையின் துவக்கமாக இருக்கக் கூடுமோ என்பதே அதற்கு காரணம். 
 

click me!