அந்த குக்கர் எல்லா ஊர்லேயும் சரியா வெந்துடாது: தினகரனை வம்புக்கிழுத்த எம்.ஜி.ஆர். ஹீரோயின்...

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
அந்த குக்கர் எல்லா ஊர்லேயும் சரியா வெந்துடாது: தினகரனை வம்புக்கிழுத்த எம்.ஜி.ஆர். ஹீரோயின்...

சுருக்கம்

Heroines of MGR Latha talk about TTV Dinakaran

’எம்.ஜி.ஆரிடம் பார்த்த ஒரு குணம் அப்படியே ரஜினியிடம் இருக்கிறது.’ என்று ரஜினி கட்சிக்கு ஒரு ஆஜர் போட்டு வைத்திருக்கும் புரட்சித்தலைவரின் ஹாட் ஹீரோயின் லதா, சந்தடிசாக்கில் தினகரனை கலாய்த்திருப்பதுதான் ஹைலைட்டே!

எம்.ஜி.ஆரின் பிந்தைய சினிமா காலங்களில் அவரது ஹாட் ஹீரோயினாக வலம் வந்தவர் லதா. ரஜினியின் முந்தைய சினிமாக்களில் அவரோடு நடித்தவரும் கூட. அந்த வகையில் இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. (இந்த விஷயத்தால் தலைவருக்கு அந்த இளம் வளரும் கறுப்பு நாயகன் மீது கடுப்பு என்பது தனி கதை)

அப்பேர்ப்பட்ட லதா இன்னமும் ஹெல்தியான பெண்மணியாக அவ்வப்போது சினிமா மற்றும் சீரியல்களில் தலைகாட்டியபடி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பின் பின் தான் எம்.ஜி.ஆரையும், ரஜினியையும் கம்பேர் செய்து அந்த ஸ்டேட்மெண்ட்டை வெளியிட்டார் லதா.

இப்பேர்ப்பட்ட சூழலில் இதுபற்றி லதாவிடம் விரிவாக கேட்டதற்கு “எளிமையா இருக்கிறார், எதுவாக இருந்தாலும் ஓப்பனா சொல்லிடுறார். இதைத்தான் எம்.ஜி.ஆரிடம் பார்த்த குணமென்றேன்.

இப்படி ஓப்பனா பேசுறதாலே கூட அரசியல்ல சிக்கல்கள் வரலாம். மற்றபடி நெருப்பாற்றில் ஈஸியா நீந்தி வந்துடுவார் ரஜினி. அவர்  கட்சி ஆரம்பிச்சதும் நான் அங்கே போய் சேர்ந்துடுவேனான்னு கேட்காதீங்க, அது இல்லாத ஊருக்கு வழி கேட்கிற மாதிரி.

அ.தி.மு.க.வை வழிநடத்த தினகரன் தான் சரியானா ஆளான்னு என்கிட்ட கேட்டீங்கன்னா....ஒரு குக்கர் சரியா வெந்துடுச்சுங்கிறதுக்காக எல்லா குக்கரும் அப்படியே இருக்குமுன்னு சொல்ல முடியாது இல்லையா. எல்லா இடத்துலேயும் அது வேகாதுன்னு நினைக்கிறேன், எனக்கு தெரிஞ்சு.” என்று ஆன் தி வேயில் தினாவுக்கு பஞ்ச் கொடுத்திருக்கிறார்.

ஹூம்! புர்சீத்தலைவர் ஈரோயினாச்சே, அந்த கெத்து இல்லாங்காட்டிதான் மாமே அதிசயம்!

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!