சிறுமி அனுப்பிரியாவுக்கு ஆண்டுதோறும் "புது சைக்கிள்" ஹீரோ நிறுவனம் அறிவிப்பு..!

By thenmozhi gFirst Published Aug 20, 2018, 12:06 PM IST
Highlights

கடந்த 4 ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக ஆசை ஆசையாய் ஐந்து உண்டியில் சேர்ந்து வைத்த 9,000 ரூபாயை கேரள மாநில மக்களுக்கு வெள்ள நிவாரண தொகையாக அனுப்பிய விழுப்புரம் மாணவிக்கு தொடர் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
 

கடந்த 4 ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக ஆசை ஆசையாய் ஐந்து உண்டியில் சேர்ந்து வைத்த 9,000 ரூபாயை கேரளா மாநில மக்களுக்கு வெள்ள நிவாரண தொகையாக அனுப்பிய விழுப்புரம் மாணவிக்கு தொடர் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

இதனை அறிந்த ஹீரோ சைக்கிள் நிறுவனம் விழுப்புரம் சிறுமியான அனுப்பிரியாவுக்கு, ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

Dear Anupriya, We appreciate your gesture to support humanity in the hour of need. You would get a brand new cycle from us. Please DM your address or contact us at customer@herocycles.com.

— Hero Cycles (@Hero_Cycles)

 

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், ஹீரோ நிறுவனம் சார்பில் இதற்கான பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.உலகம் முழுவதும் உள்ள நல்ல உள்ளங்கள் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் சமயத்தில் இதுபோன்ற மனம் நெகிழ வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

சிறுமி அனுப்பிரியாவின் இந்த நல்ல செயல் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. சிறுமி அனுப்பிரியாவின் இந்த செயலை கேட்டறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பிரியாவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

Anupriya, parnam to you. You are a noble soul and wish you spread the good around. Hero is too pleased to give you one bike every year of your life. Pl share your contact on my account. Love you and best wishes. Prayers for Kerala https://t.co/vTUlxlTnQR

— Pankaj M Munjal (@PankajMMunjal)

மேலும் சிறுமி அனுப்பிரியாவுக்கு சைக்கிள் வாங்கி ஓட்ட வேண்டும் என்பதில் இருந்த பேரார்வம்,கேரள மக்களின் தற்போதைய நிலையை கண்டு தன்னால் இயன்ற, இதுவரை உண்டியில சேர்த்து வைத்த பணத்தை சிறுமி அனுப்பிரியா மனம் உவந்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. 

click me!