
ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள அதிமுக சார்பில் கழக உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் புதிய குழு அமைக்க அதிமுக திட்டமிட்டு உள்ளது
இது தொடர்பாக தற்போது அறிக்கை ஒன்றை அதிமுக சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது
நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களிலும் இனி இந்த புதிய குழுவில் இடம்பெறும் நபர்கள் மட்டுமே பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
தொலைகாட்சியை பொறுத்தவரை, நெறியாளர்கள் கேட்கும் கேள்விக்கு ஏதாவது வாய் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இதை எல்லாம் தவிர்க்கும் பொருட்டும்,எதை பேச வேண்டுமோ அதை மட்டும் பேசும் நோக்கில் தற்போது புதிய குழுவை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது
இந்தக் குழுவில் இடம்பெறும் கழக உடன்பிறப்புகள் மட்டுமே ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்து கொண்டு கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக செயல்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்த அறிவிப்பு இதோ....