நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தாமதம் கூடாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

By Narendran S  |  First Published Feb 6, 2023, 7:23 PM IST

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், மயானப் பாதை வசதி ஏற்படுத்தித் தருதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம்பெறாததற்கு இதுதான் காரணம்... விளக்கம் அளித்தார் சி.வி.சண்முகம்!!

Tap to resize

Latest Videos

பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளாக மாற்றப்பட வேண்டும், அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமுமின்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக நில நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் பயனாளிகளுக்கு முறையாக அளந்து காட்டப்பட வேண்டும் என்றும், அங்கு அவர்கள் வீடுகட்டி குடியேறுவதற்கான வசதிகளையும் செய்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கிராமப்புறங்களில் மயான வசதி மற்றும் மயான வழிப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும், இத்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதிகளை முழுமையாக செலவு செய்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

click me!