அடேய்.. சீனாக்காரா.. இப்போதாவது இந்த வைரஸ் குறித்து தகவல்களை கொடு.. பொறுக்க முடியாமல் கதறும் WHO.

Published : Dec 21, 2021, 02:39 PM ISTUpdated : Dec 21, 2021, 02:50 PM IST
அடேய்.. சீனாக்காரா.. இப்போதாவது இந்த வைரஸ் குறித்து தகவல்களை கொடு.. பொறுக்க முடியாமல் கதறும் WHO.

சுருக்கம்

இந்த வைரஸ் மிகத் தீவிரமாக பரவக்கூடியது. மொத்தத்தில் இந்த வைரசில் தோற்றம் குறித்து முழுமையாக தெரிந்தால் மட்டுமே, அதன் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். 

ஒமைக்ரான் கொரோவைக் காட்டிலும் மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா வைரஸ்சின் தோற்றம் குறித்த கூடுதல் தகவல்களை சீனா வெளியிட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதன் தோற்றத்தை கண்டறியும்வரை கடினமான நாட்களை கடந்து தான் ஆக வேண்டும், எனவே அதன் தோற்றத்தை கண்டறிய சீனா இந்த வைரஸ் குறித்த தரவுகளை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொடர்பான பல தகவல்களை சீனா மறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் உலக சுகாதார நிறுவனம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த உலகமும் திண்டாடி வருகிறது. தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்றும் என்ற முனைப்பில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இதை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. 

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, தடுப்பூசிகள் உயிர்காக்கும் நிவாரணியாக இருந்துவருகிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கொரோனா வைரஸ் என்பதே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் நீங்க முடியாது அரக்கனாக மாறியுள்ளது. குரலை என்பதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது, அதனுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதேநேரத்தில் கொரோனா வைரஸ் அடிக்கடி பிழவுகளுடன் உருமாறி வருகிறது. கொரோனா என்பது டெல்டா வைரஸ் ஆக உருமாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது முதல் அலையில் இருந்து இரண்டாவது அலையாக உருவெடுத்தது. தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு டெல்டா வகை வைரஸ் அதிக பிறழ்வுகளுடன் உருமாறியுள்ளது. இதுவோ ஒமைக்ரான் வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டது. இது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அனைத்து நாடுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதன் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 54 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 20 பேருக்கும் கர்நாடகாவில் 19 பேருக்கும் ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உதவி செய்யப்பட்டுள்ளது. 200 பேர் பாதிக்கப்பட்டதில் 77 பேர் அதிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்த வைரசால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இது டெல்டாவைவிட வேகமாக பரவுவதாக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் இந்த வைரஸ் ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் ஒரு கூறியுள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை உலக நாடுகள் தள்ளி வைக்கவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜெனிவாவில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், இந்த வைரஸ் மிகத் தீவிரமாக பரவக்கூடியது. மொத்தத்தில் இந்த வைரசில் தோற்றம் குறித்து முழுமையாக தெரிந்தால் மட்டுமே, அதன் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். எனவே அதன் தோற்றத்தை கண்டறியும் வரை கடினமான நாட்களை நாம் கடந்தாக வேண்டும், இந்நிலையில் சீனா கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே இந்த வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது என்றும், சீனாவில் வூகான் ஆய்வுகூடத்தில் இருந்து கசிந்த வைரஸ் என்றும் சீனாவின் மீது குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் உலக சுகாதார நிறுவனம் சீனா இந்த வைரசுக்கான தோற்றம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாராஇபிஎஸ் ..? என மோசமான கேள்வி
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! வீட்டின் கதவை உடைத்து காவல்துறை அதிரடி..!