
பிரதமர் மோடி அன்புத் தாயார் ஹீராபா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (100) வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- கண்ணீர்மல்க தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி - கண்கலங்க வைக்கும் வீடியோ இதோ
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தங்கள் அன்புத்தாயார் ஹீராபா அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்.
துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- 100-வது பிறந்த நாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் ஞாபகம் இருக்கும்! அப்படி என்ன சொன்னார்? பிரதமர் டுவீட்..!