ஒரு சொட்டு நீர் கூட தேங்காதுன்னு வீர வசனம் பேசினீங்களே.. இனியாவது திருந்துங்க.. நாராயணன் திருப்பதி விளாசல்.!

By vinoth kumar  |  First Published Dec 5, 2023, 7:13 AM IST

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கியது. 


வாகனங்கள் நீரில் அடித்து செல்லும்படியான அவல நிலைக்கு சென்னை தள்ளப்பட்டிருப்பது ஏன்? யார் பொறுப்பேற்பது? என நாராயணன் திருப்பதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தலைநகர் சென்னையே மழை வெள்ளம் தலைகீழாக புரட்டிபோட்டது. இதனால், பொதுமக்கள் உணவு இல்லாமல் சொல்ல முடியா துயரம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஒரு சொட்டு நீர் கூட தேங்காது' என்ற வீர வசனம் தேவையில்லாதது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Chennai Heavy Rain:தலைநகரை தலைகீழாக புரட்டிபோட்ட கனமழை! மீண்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம்!

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத்தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- சென்னையில் பெரும் மழை தான். மாற்றுக் கருத்தில்லை. ஆனால், 'ஒரு சொட்டு நீர் கூட தேங்காது' என்ற வீர வசனம் தேவையில்லாதது. கடந்த இரண்டு வருட ஆட்சியில், நீர்நிலைகளை தூர் வாராதது ஏன், சாலைகளை செப்பனிடாதது ஏன்? என்று விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது. வாகனங்கள் நீரில் அடித்து செல்லும்படியான அவல நிலைக்கு சென்னை தள்ளப்பட்டிருப்பது ஏன்? யார் பொறுப்பேற்பது? 

இதையும் படிங்க;-  மிக்ஜாம்: போர்க்கால அடிப்படையில் மீட்பு & நிவாரணப் பணிகள்.. ஓரணியாய் திரள்வோம்.. முதலமைச்சர் அழைப்பு.!!

தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் தலைநகரம் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மறுக்கிறாரா? சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதற்கு மெட்ரோ வேலைகள் காரணம் என்று சமாளிக்காமல், அதற்கான தீர்வுகளை ஏன் செயல்படுத்த முடியவில்லை என்று அரசு விளக்க வேண்டும். ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என்று வீரவசனம் பேசியவர்கள் இனியாவது திருந்தட்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

click me!