தலையை சுத்த வைக்கும் பெட்ரோல் விலை … நாளுக்கு நாள் ஏறுமுகம்!!

 
Published : Jan 24, 2018, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
தலையை சுத்த வைக்கும் பெட்ரோல் விலை … நாளுக்கு நாள் ஏறுமுகம்!!

சுருக்கம்

Heavy hike petrol price

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிதது வருவதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைவிட இன்று மேலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுமுகமாக உள்ளது.

இதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு பீப்பாய் பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் 69.41 அமெரிக்க டாலர்கள் என்னும் அளவை எட்டியது. இதேபோல் டீசலின் விலை ஒரு பீப்பாய் 63.99 அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

இதனால் இந்தியாவின் அனைத்து நகரங்களில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. சென்னையில், லிட்டர் 75 ரூபாய் 12 காசுகளாக உயர்ந்துள்ளது. இந்த விலை நேற்றைய விலையை விட 6 காசுகள் கூடுதலாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

தற்போது, மத்திய அரசு பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக ஒரு லிட்டருக்கு 19 ரூபாய் 48 காசுகளும், டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகளும் விதிக்கிறது. இது தவிர மாநில அரசுகள் இவற்றின் மீது மதிப்பு கூட்டு வரி வசூலிப்பதால் பெட்ரோல், டீசல் மீதான விலை இன்னும் கூடுகிறது.



தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இவற்றின் மீதான வரிகளை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சகத்திடம் 2018-19-ம் ஆண்டு தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெட்ரோலியத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!