ஹெச்.ராஜா மீது கடும் நடவடிக்கை... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..!

Published : Jan 02, 2020, 01:00 PM IST
ஹெச்.ராஜா மீது கடும் நடவடிக்கை... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி..!

சுருக்கம்

தனது பேச்சின் மூலம் வன்முறையை தூண்டி தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் நெல்லை கண்ணனின் பேச்சு இருந்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தனது பேச்சின் மூலம் வன்முறையை தூண்டி தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் நெல்லை கண்ணனின் பேச்சு இருந்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றிய அவரது பேச்சின் ஆழம் பார்த்தே நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதற்கு முன்பு எச்.ராஜா எஸ்.வி.சேகர் போன்றவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோது கைது செய்யப்படாது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அவர்களின் பேச்சு பொதுவாக இருந்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் இல்லை என்று விளக்கமளித்தார். 

மேலும், குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராடிய மாணவர்களின் கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என்று ஹெச்.ராஜா கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்ததால் தான் ஆட்சியில் இருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அது நான்கு சுவற்றுக்குள் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாகவும் எனவே அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!