மாறி மாறி மாஸ் காட்டும் அதிமுக, திமுக... பதற்றத்தில் முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jan 2, 2020, 12:26 PM IST
Highlights

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பின் வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற  ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது, ஒன்றிய கவுன்சிலரில் அதிமுகவும், மாவட்ட கவுன்சிலரில் திமுகவும் முன்னிலையில் உள்ளனர். 

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பின் வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தபால் ஓட்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக செல்லா ஓட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகிறது. பல இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மொத்தம் உள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ஆளும் அதிமுக 129 இடங்களிலும், திமுக 100 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேபோல், 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 56 இடங்களிலும், திமுக 63 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

click me!