ஒற்றை தலைமை விவகாரம்: ஓபிஎஸ் ஆதரவு தீர்ப்பிற்கு தடை கிடைக்குமா..? இபிஎஸ் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

By Ajmal KhanFirst Published Jul 6, 2022, 9:34 AM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர வேறு நிறைவேற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்க்கு எதிராக இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
 

ஓபிஎஸ்- இபிஎஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஒரு  மாதமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொளுத்தி போட்ட ஒற்றை தலைமை பிரச்சனை தற்போது வரை அடங்கியதாக இல்லை, நாள் தோறும் புதுப்புது பிரச்சனைகள் ஏற்படுத்தி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்க்கு  ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.  அந்த வகையில் 95% அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஓபிஎஸ்சை வசைபாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக இபிஎஸ் கொண்டு வர அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். இதற்க்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை !! ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை..

உச்சநீதிமன்றதில் முறையீடு

இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி  ஓபிஎஸ் நீதிம்ன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடும் கோபத்திற்குள்ளான இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிராகரித்தது. இதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாக வந்த தீர்ப்பிற்கு எதிராக இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்  அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும் என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் மூடில் இபிஎஸ்.. கொடநாடு கொலை, கொள்ளை அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ் தரப்பு.. அடுத்து என்ன?

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை..?

இந்தநிலையில், ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவைத் தடுக்க அவர் பல்வேறு வழிகளில் ஓ.பன்னீர் செல்வம் முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன், கட்சி சிறப்பாக வழிநடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.  ஆனால், கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்தநிலையில், இந்த மனு மீதான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இதையும் படியுங்கள்

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்..! ஆ.ராசாவிற்கு டஃப் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்

 

click me!