பிராய்லர் கோழி, முட்டை சாப்பிட்டால் கொரோனா...?? அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 6, 2020, 6:37 PM IST
Highlights

பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி முட்டை ஆகியவை சாப்பிடுவதால் புற்றுநோய் வைரஸ் வராது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க  பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி முட்டை ஆகியவை சாப்பிடுவதால் புற்றுநோய் வைரஸ் வராது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க  பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.   இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் . சுமார்  98 ஆயிரத்திற்கும்  அதிகமானோருக்கு  வைரஸ் தாக்கம்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 . 

இந்நிலையில்  இந்தியாவிலும் இந்த வைரஸ் தன் வேலையை காட்டத் தொடங்கியுள்ளது .  இதனால் நாடு முழுவதும் இந்த வைரஸை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .  இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,  இதுவரையில் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது .  ஆனால் தமிழகத்தில் இன்று வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதால் நோய்  தாக்கம் இல்லை , பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து எவ்விதமான பதட்டமும் பயமும் அடைய தேவையில்லை . 

அதேபோல் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் , அதே நேரத்தில் பொது மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் .  பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி ,  முட்டை ஆகியவை சாப்பிடுவதால் நோய் பரவுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது .  சீனாவில் இந்த நோய் தாக்கத்தால் இரண்டு  சதவீத இழப்புதான் என்று கண்டறியப்பட்டுள்ளது . அதே நேரத்தில் சீனாவைத் தவிர மற்ற இடங்களில் இறப்பு சதவீதம் 0.2 சதவீதம்தான் .  நோயை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு தீவிரமாக எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார் .
 

click me!