சுற்றி சுழன்று அடிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்..!! கொரோனாவை அழிக்க 6500 பேரை அதிரடியாக களமிறக்கினார்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2020, 10:51 AM IST
Highlights

லைசால் அண்ட் ஹைட்ரோ குளோரைட் கிருமி நாசினி தெளிக்க 5000 எண்ணிக்கையிலான Knapsack – Sprayer மற்றும் 1,500 எண்ணிக்கையிலான Power - Sprayer கருவிகள் என சுமார் 43 சுகாதார மாவட்டங்களுக்கும்  வழங்கியுள்ளார்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் சுமார் 6500க்கும் அதிகமான பணியாளர்களை  நியமித்து அவர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும்  நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது .  கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது ,  நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது ,  இதன் மூலம் தமிழகத்தில்  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 574 ஆக உயர்ந்துள்ளது .  இதுவரை இந்த காய்ச்சலுக்கு தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .  இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டிவருகிறது .  இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 77 ஆயிரத்து 330 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .  

அதே நேரத்தில்  டெல்லியில் நடைபெற்ற மத ரீதியான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய சுமார் 1,131 பேரில்  515 பேரைக் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இந்நிலையில் தலைமறைவாக உள்ள 615 பேரை சுகாதாரத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர் , இந்நிலையில்  தமிழகம் முழுவதிலும் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் இந்நிலையில் கிருமி  நாசினிகள் தெளித்து வைரஸ் கிருமிகளை அழிக்க தமிழக அரசு களமிறங்கி உள்ளது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி , கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது , 

இந்நிலையில் இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மூலம் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கிருமிநாசினிகள் லைசால் அண்ட் ஹைட்ரோ குளோரைட் கிருமி நாசினி தெளிக்க 5000 எண்ணிக்கையிலான Knapsack – Sprayer மற்றும் 1,500 எண்ணிக்கையிலான Power - Sprayer கருவிகள் என சுமார் 43 சுகாதார மாவட்டங்களுக்கும்  வழங்கியுள்ளார்,  அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கிருமிநாசினி  தெளிப்பதற்கு உள்ளாட்சித் துறை மூலம் சுமார் 6500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்

 

click me!