சவால் விட்ட எல்.முருகனுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த மா.சு... அப்படியே வச்சார் பாருங்க ஒரு ட்விஸ்டு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 29, 2021, 2:03 PM IST
Highlights

தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை கோரிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார். 

தமிழகத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் வந்தது? அதில் எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியிருந்தார். இன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எல்.முருகனுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார். 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கை விட வேண்டுமென சொல்லியிருக்கிறார். தினந்தோறும் தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறோம். இதுவரை தமிழகத்திற்கு வந்துள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 ஆகும். 

இதிலிருந்து இதுவரை இதுவரை செலுத்தப்பட்ட எண்ணிக்கை ஒரு கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 249. தற்போது வரை 2 லட்சத்து 07 ஆயிரத்து 375 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.  இன்று மாலை 2 லட்சம் டோஸ் தடுப்பூசி வருவதாக கூறியுள்ளார். நேற்று இரவு வரை இருந்த கையிருப்பு என்பது இன்று மாலைக்குள் போடப்பட்டுவிடும், இன்று மாலை வர உள்ள 2 லட்சம் டோஸ் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக பிரித்து அனுப்பப்படும்.  99 கோடியே 84 லட்சம் தொகை செலுத்தி, 29 லட்சத்து 92 ஆயிரம் தடுப்பூசிகளை தனியாரிடமிருந்து மாநில அரசு  வாங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசு 1.14 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இது தான் தடுப்பூசி நிலவரம் பற்றிய வெள்ளை அறிக்கை என்றார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், கட்டிட தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பாகுபாடியின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். எனவே பாஜக தலைவர் எல்.முருகன், மத்திய அரசிடம் பேசி கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரே எதிர்பார்க்காத  வகையில் அதிரடி ட்விஸ்டையும் வைத்துள்ளார். 
 

click me!