நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்... சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 12, 2021, 7:14 PM IST
Highlights

நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் நாளை முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் ஒருமாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த குழு அமைத்ததே தவறு என பாஜகவின் துணைத் தலைவர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வலியுறுத்தி மக்கள் மீது அக்கறையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தெளிவான முடிவை அறிவிக்கும். 

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் உறுதியான கொள்கை, இதில் எவ்வித கருத்து மாறுபாடும் இல்லை. நீட் தேர்வு தேவையில்லை என ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை கடைசிவரை அதிமுக அரசு சட்டமன்றத்தில் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் திமுக அரசு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உறுதியான, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வில் இருந்து மாணவர்களை காக்கும் நோக்கில் தான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது, ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவின் துணை தலைவர் தன்னுடைய சுயரூபத்தை காண்பித்து இருக்கிறார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நீட் தேர்வுக்காக அரசு அளித்து வரும் பயிற்சியும் தொடர்ந்து வருகிறது. ஏனெனில் கடைசி நேரத்தில் தேர்வு எழுதியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மாணவர்கள் அதனை எதிர்கொள்ளவே தயார்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார். நீட்  தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் தவறில்லை என்றும், படிப்பது அனைத்தும் மறக்க கூடியது அல்ல என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

click me!