சசிகலா தனது தரத்தை குறைத்துக் கொள்கிறார்... கடம்பூர் ராஜூ கவலை..!

Published : Jul 12, 2021, 06:11 PM IST
சசிகலா தனது தரத்தை குறைத்துக் கொள்கிறார்... கடம்பூர் ராஜூ கவலை..!

சுருக்கம்

அதிமுகவை வழிநடத்தப்போவதாக அமமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசுவது வேடிக்கை.

அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்களிடம் தொலைபேசியில் பேசி சசிகலா தனது தரத்தை குறைத்துக்கொள்கிறார் என கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். 

அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார் சசிகலா. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றவுடன் அக்கட்சியை கைப்பற்ற போவதாகவும், தன்னோடு வாருங்கள் எனவும் தொண்டர்கள் சிலருக்கு போன் போட்டு பேசி வருகிறார் சசிகலா. அந்த ஆடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ. ‘’அதிமுகவை வழிநடத்தப்போவதாக அமமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசுவது வேடிக்கை. நாட்டில் யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என சசிகலாவுக்கு தெரியவில்லை. அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்களிடம் தொலைபேசியில் பேசி சசிகலா தனது தரத்தை குறைத்துக்கொள்கிறார் . உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என முடிவு எடுத்திருக்கலாம்’’ என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!