அடித்தது லக்... இந்த மாணவர்களுக்கும் மாதம் 3 ஆயிரம் கொடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.

Published : Jul 12, 2021, 05:33 PM IST
அடித்தது லக்... இந்த மாணவர்களுக்கும் மாதம் 3 ஆயிரம் கொடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.

சுருக்கம்

அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பு முடித்து வெளி வரும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. 

இந்த திட்டத்தின் கீழ், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் இன் லா எனும், சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இதுசம்பந்தமான அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், சீர்மிகு சட்டப் பள்ளியில்  சட்டம் படித்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அரசு சட்டக் கல்லூரி என்பது அரசால், அரசு நிதியுதவியால் நடத்தப்படுவது எனவும், அந்த வகையில் சீர்மிகு சட்டப் பள்ளியும், அரசால் நிர்வகிக்கப்படுவதால், அதுவும் அரசு சட்டக் கல்லூரி தான் எனக் கூறி, அந்த கல்லூரியில் படித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்கிறவர்கள், பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் உதவித்தொகையை வழங்கவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!