கெத்தா வருவாரு... அதே பழைய கம்பீரக்குரலால் மிரட்டுவாரு! அப்பாவை பற்றி சொல்லும் விஜயபிரபாகரன்...

By sathish kFirst Published Dec 19, 2018, 1:21 PM IST
Highlights

அவர் பழைய நிலைமைக்கு திரும்பிவிடுவார். அவரை சிங்க நிகர் தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். பிரச்சாரத்திலும் பங்கேற்பார்” என்று தெரிவித்திருந்தார் விஜயபிரபாகரன்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார். இதற்காக அவ்வப்போது சிகிச்சையும் எடுத்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், 45 நாட்கள் அங்குத் தங்கி சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார். அதன்பிறகு இரண்டு முறை சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு வெளி இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்த விஜயகாந்த், வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்தை நியமனம் செய்தார். மேலும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் விஜயகாந்த். அவருடன் பிரேமலதா விஜயகாந்த், சண்முகப் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். ஒருமாதம் அங்கு சிகிச்சை பெறவுள்ள விஜயகாந்த், பிப்ரவரியில் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், “டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ளோம். அதன்பிறகு அவர் பழைய நிலைமைக்கு திரும்பிவிடுவார். அவரை சிங்க நிகர் தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். பிரச்சாரத்திலும் பங்கேற்பார்” என்று தெரிவித்திருந்தார்

click me!