கொங்கு மண்டலத்தில் தனி சாம்ராஜ்யம் அமைக்கும் செந்தில் பாலாஜி... கலக்கத்தில் பழைய கைகள்!

By sathish kFirst Published Dec 19, 2018, 12:05 PM IST
Highlights

கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள மாவட்டத்திலும், தனக்கான ஒரு சாம்ராஜ்யத்தை மைக்க தீவிரமாய் சுற்றிவரும் செந்தில் பாலாஜியின் செயலால் திமுகவின் பழைய கைகள் கலக்கத்தில் உள்ளார்களாம்.
 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமமுகவிலிருந்து திமுக.,வில் இணைந்த, 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டச் செயலரை, 'கழற்றி' விட்டு, தனியாக சென்று, தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கொங்கு மண்டலத்தில், வலுவான நிர்வாகிகள் இல்லாமல், திமுக., தடுமாறி வந்தது திமுக, அதுவும், கரூர் மாவட்டத்தில், திறமையான நிர்வாகிகள் இன்றி தவிப்பதால், இழுக்கப்பட்டவர் தான், சுறுசுறுப்பாக வேலை செய்யும் பணபலம், செல்வாக்கு மிக்க ஒரு இளம் அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.  

நேற்று முதல், கரூர் நகரம், பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகளை, செந்தில் பாலாஜி சந்தித்து வருகிறார். ஆனால், தன்னுடன், மாவட்டச் செயலர் ராஜேந்திரனை அழைத்து செல்லவில்லை.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:எங்கள் கட்சியில், மாவட்டச் செயலர் பதவி, பலம் வாய்ந்தது. அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாது. நன்னியூர் ராஜேந்திரன் செயல்பாடுகளால், கட்சி தேயத் தொடங்கியதால், அவரை மாற்ற வேண்டும் என, தலைமை முடிவு செய்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் வருகை, ஸ்டாலினுக்கு பெரிய நம்பிக்கையை தந்தது. தலைமையின் உத்தரவுப்படி, கொங்கு மண்டலம் முழுவதையும், தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலையை, செந்தில் பாலாஜி துவக்கி விட்டார். அதனால் தான், கரூர் மாவட்டத்துக்கு அப்பாற்பட்டு, கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிற மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும், கவுண்டர் சமூக பிரபலங்களையும் சந்தித்து வருகிறார்.

மாற்றுக் கட்சியில் இருந்து முக்கியமானவர்கள் வந்து இணைந்தால், மாவட்டச் செயலர் தலைமையில், அறிமுக நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற நடைமுறையை, செந்தில் பாலாஜி மாற்றி உள்ளார். ராஜேந்திரனை ஓரங்கட்டி, மாவட்டம் முழுவதும் தனித்தே சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் இவ்வாறு  கூறுகின்றனர்.

அதிமுகவில் சரி, தனியாக பிரிந்து வந்து தொடங்கப்பட்ட அமமுகவிலும் தினகரன் பெரிதாய் நம்பிக்கை வைத்தவர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. அதுமட்டுமல்ல செந்தில் பாலாஜி என்னுடைய கம்பியூட்டர் என சொல்லும் அளவிற்கு திறமை சாலி, இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர். ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். அதுமட்டுமல்ல, சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார். அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது கொங்கு மண்டலத்தில் தனி சாம்ராஜ்யம் அமைக்க தீயா வேலை பார்த்து வருவது திமுகவின் பழைய கைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

click me!