பிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..!

Published : Oct 21, 2020, 04:45 PM IST
பிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..!

சுருக்கம்

அதிமுக மக்களுடன் மக்களாக இருக்கிறது. அதனால், நாங்கள் தேர்தல் நேரத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றி பெறுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக மக்களுடன் மக்களாக இருக்கிறது. அதனால், நாங்கள் தேர்தல் நேரத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றி பெறுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுக மக்களுடன் மக்களாக இருக்கிறது. அதனால், நாங்கள் தேர்தல் நேரத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றி பெறுவோம். மீண்டும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். இதனை நாங்கள் 100 சதவீதம் நம்புகிறோம். ஆனால், திமுக மனதில் அந்த நம்பிக்கை இல்லை. பலவீனமாக இருப்பவர்கள்தான் தேர்தலை எப்படி அணுகுவது எனச் சந்திப்புகள், ஆலோசனைகள் நடத்துவர். இது அவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுகின்றது, பலத்தைக் காட்டவில்லை என்றார்.

மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லியிலுள்ள பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என எல்.முருகன் தெரிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தெரிவித்தார்.

மகாபாரதம் முப்பாட்டன்களின் சரித்திரம் என கமல்ஹாசன் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் கமல் திடீரென நாத்திகவாதி என்பார், திடீரென ஆத்திகவாதி என்பார். அவர் சொல்வது யாருக்கும் புரியாது. 'பிக் பாஸ்' போனதால் என்ன வேண்டுமானாலும் சொல்வார். தேர்தல் காலம் என்பதால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகக் கூட சொல்லலாம். அதுதான் அவருடைய நிலை என்றும் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!