பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மிதித்தீர்களேடா..! திருமாவை கொந்தளிக்க வைத்த பதிவு.. ஷேர் செய்து திருமா ஆவேசம்.!

By Asianet TamilFirst Published Dec 2, 2021, 8:37 AM IST
Highlights

“பல்லாயிரக்க்கணக்கான ஆண்டுகள் தரையில் போட்டு மிதித்தீர்களேடா? இப்போது நாற்காலி மீதோ மேசையின் மீதோ நடக்கட்டுமேடா? தாங்கிக்கொள்ள முடியாதவன் அந்த தண்ணீரிலேயே போய் விழு!” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

காலம்காலமாய் எம்மைக்  கவனிக்க மறுத்தவர்கள் கருணையின்றி எம்வாழ்வைக் கடந்து போனவர்கள் இன்று இம்மி அசைவுகளையும் இமைக்காமல் பார்க்கின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மழை, வெள்ள நீரால் சென்னை மாநகரம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி தொகுதியில் உள்ள தமிழ்நாடு குடியிறுப்பு காலணியில் விசிக தலைவர் திருமாவளவன் வசித்து வருகிறார். மழை காரணமாக அவருடைய வீட்டில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லிக்குப் புறப்பட்டார். ஆனால் கனமழை காரணமாக அவரது வீட்டில் 2 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் தண்ணீரில் நடந்தால் தனது ஷூ, பேண்ட் நனைந்துவிடும் என்பதால், இரும்பு நாற்காலியில் ஏறி நடந்து சென்று, காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இந்தக் காணொலி காட்சி வெளியானதை அடுத்து சமூக ஊடகங்களில் பாஜக, பாமகவினர் திருமாவளவனை கிண்டலடித்தும் விமர்சித்தும் பதிவிட்டனர். இதுகுறித்து திருமாவளவன் விளக்கமும் அளித்திருந்தார். அதற்கு பதிலடியாக திருமாவை_கொண்டாடுவோம் என்று விசிகவினரும் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் திருமாவை_கொண்டாடுவோம் என்ற ஹாஷ்டெக்கில் சுப.உதயகுமாரன் நேற்று பதிவிட்டார். அதில், “பல்லாயிரக்க்கணக்கான ஆண்டுகள் தரையில் போட்டு மிதித்தீர்களேடா? இப்போது நாற்காலி மீதோ மேசையின் மீதோ நடக்கட்டுமேடா? தாங்கிக்கொள்ள முடியாதவன் அந்த தண்ணீரிலேயே போய் விழு!” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே சுப.உதயகுமாரன் பதிவையும் வேறு ஒருவர் எழுதிய பதிவையும் இணைத்து திருமாவளவன் ட்விட்டரில் கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.

"சாதிநெருப்பில் எம் குடிசைகள்
சாம்பலாய்க் கருகியபோதும்
கொலைவெறிக் கும்பல் எம்
குருதியைக் குடித்தபோதும்

காலம்காலமாய் எம்மைக்  கவனிக்க மறுத்தவர்கள்
கருணையின்றி எம்வாழ்வைக் கடந்து போனவர்கள்
இன்று இம்மி அசைவுகளையும்
இமைக்காமல் பார்க்கின்றனர்.

கனிவார்ந்த கரிசனமில்லை காழ்ப்புணர்ச்சி.” என்று  ட்விட்டரில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

 

click me!