அதிமுக கூறிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா..? மு.க.ஸ்டாலின் பதிலடி..!

Published : Aug 16, 2021, 11:27 AM ISTUpdated : Aug 16, 2021, 11:42 AM IST
அதிமுக கூறிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா..? மு.க.ஸ்டாலின் பதிலடி..!

சுருக்கம்

எக்காரணம் கொண்டும் கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என பட்ஜெட் விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

எக்காரணம் கொண்டும் கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என பட்ஜெட் விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ’’அதிமுக ஆட்சியில்,மோனோ ரயில் திட்டம் கொண்டுவருவீர்கள் என சொன்னீர்கள். செய்தீர்களா..? அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி ஆதாரத்துடன் மானியக்கோரிக்கை விவாதத்தில் பதிலளிக்கப்படும். அதிமுகவின் கூறிய அனைத்து தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? அதிமுக அளித்த வாக்குறுதிகளான இலவச செல்போன், இலவச மினரல் வாட்டர் உள்ளிட்டவை என்னாச்சு?

விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடியில் பல குறைகள் இருக்கிறது.  அதை எல்லாம் சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறினார். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!
சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..