
ஆர்கே நகர் இடை தேர்தலில் அதிமுக சசிகலா - ஓ.பி.எஸ். ஆகிய இரு அணிகளும் போட்டியிடுகின்றன. இதில், இரட்டை இலை சின்னம் கேட்டு இரு தரப்பினரும், தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டது. அதே போல், அதிமுக என்ற பெயரையும் குறிப்பிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் இரட்டை விளக்கு சின்னம் ஒதுக்க வேண்டும் என கேரினர். சசிகலா தரப்பினர் கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக் ஷா, தொப்பி ஆகியவற்றில் ஒன்றை தங்களுக்கு சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரினர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று இரு தரப்பினருக்கும் சின்னங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை மின் கம்பமும், சசிகலாவுக்கு தொப்பியும் சின்னமாக ஒதுக்கியுள்ளது.