ஆசிரியர்கள் வயிற்றில் பால்வார்த்த தமிழக அரசு. அதிமுக அரசு எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தூக்கியடித்து உத்தரவு

Published : Jul 02, 2021, 10:43 AM IST
ஆசிரியர்கள் வயிற்றில் பால்வார்த்த தமிழக அரசு. அதிமுக அரசு எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தூக்கியடித்து உத்தரவு

சுருக்கம்

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியிலன் போது நடைப்பெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அப்போது இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும், ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கி இருப்பின் அதை ரத்து செய்தும் விவரங்கள் கேட்கப்பட்ட போது ஒரு சில மாவட்டங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், 17 B பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து, பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும்,

தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட நாள்கள் அடிப்படையில் பணிக்காலத்தை முறைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்து மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!