குடிமகன்களுக்கு Happy News.. தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் மது அருந்த கூடாது என்பது வதந்தி.. ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Feb 15, 2021, 3:59 PM IST
Highlights

28 நாள் இடைவெளி என்பதை  ஒருநாள் முன்பின் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என வலியுறுத்தி வருகிறோம். 10 விழுக்காடு தடுப்பூசி வீணாவது இயல்புதான். தடுப்பூசி சிறிதளவு வீணாவதாக வரும் செய்தி உண்மைதான். 

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களையும் கொரோனா தடுப்பூசிக்கான முன்கள பணியாளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ள தவறினால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக தாமதமாகும் எனவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று இரண்டாம் தவணை கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 47ஆயிரத்து 372 பேர்  தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அதிகபட்ச அளவாக கடந்த சனிக்கிழமை 20,032 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 2.10 லட்சம்  சுகாதார பணியாளர்கள் , 22,856 முன்கள பணியாளர்கள், 14,186 காவலர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 628 தடுப்பூசி மையங்கள் எனும்  எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னை ,கோவை ,திருச்சி, மதுரையில் தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. வேலுர்  , திருவாரூர் திருவண்ணாமலை ,  திருவள்ளூர், நாகையில் தடுப்பூசி செலித்தியோர் எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கிறது. 

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளையும் முன்கள பணியாளர்களாக பதிவு செய்யுமாறு மத்திய குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான பணி தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக  இருக்கின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியளவில் 10 ல் ஒருவர் மட்டுமே  இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் 36 சதவீதம் பேர் மட்டுமே முதல் நாளில்  இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.  

28 நாள் இடைவெளி என்பதை  ஒருநாள் முன்பின் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என வலியுறுத்தி வருகிறோம்.10 விழுக்காடு தடுப்பூசி வீணாவது இயல்புதான். தடுப்பூசி சிறிதளவு வீணாவதாக வரும் செய்தி உண்மைதான். ஆனால் உலக சுகாதார நிறுவனம்  நிர்ணயித்த அளவுக்குள்தான் தமிழகத்தில் தடுப்பூசி வீணாகும் விழுக்காடு இருக்கிறது. பிற மாநிலங்களில் 15-20 சதவீதம் தடுப்பூசி வீணாகிறது. 100 பேர் வர வேண்டிய இடத்தில்  50-60 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நிலையத்திற்கு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் மது அருந்த கூடாது என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகள் தவறானது. 

2ம்  தவணை தடுப்பூசியை செலுத்த தாமதமாகும் போது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக காலதாமதம் ஆகும் என ஒழுங்குறை ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சுற்றுப்புறங்களில் நீர் தேங்க விடாமல் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

 

 

click me!