சிக்கன் பிரியாணி ஃபுல் கட்டு கட்டிய இளைஞர்.. ரத்தவாந்தி எடுத்து, மயங்கி விழுந்து உயிரிழப்பு.

Published : Sep 21, 2021, 10:48 AM ISTUpdated : Sep 21, 2021, 10:49 AM IST
சிக்கன் பிரியாணி ஃபுல் கட்டு கட்டிய இளைஞர்.. ரத்தவாந்தி எடுத்து, மயங்கி விழுந்து உயிரிழப்பு.

சுருக்கம்

தெலுங்கானா மாநிலம் ஹன்மகொண்ட மாவட்டத்தில் சென்னராவுப்பேட்டை  மண்டலத்தில் உள்ள போடாதாண்டாவை சேர்ந்தவர் பிரசாத்(23) கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் நரசம் பேட்டை நகருக்கு வந்தார். 

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தெலுங்கானா மாநிலத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அசைவப் பிரியர்களின் ராஜ உணவாக இருந்துவருகிறது பிரியாணி,  வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் குடும்பங்களில் முதல் சாய்ஸ் பிரியாணிதான். இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் பிரியாணி பிரியர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஹன்மகொண்ட மாவட்டத்தில் சென்னராவுப்பேட்டை  மண்டலத்தில் உள்ள போடாதாண்டாவை சேர்ந்தவர் பிரசாத்(23) கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் நரசம் பேட்டை நகருக்கு வந்தார். மத்தியான வேளையில் பிரசாந்த் அங்குள்ள ஒரு உணவகத்திற்கு சென்று, கோழி பிரியாணி ஆர்டர் செய்தார், பிரியாணி மிகவும் சுவையாக இருந்ததால் விரும்பி சாப்பிட்டார். பின்னர் உணவகத்தில் இருந்து வெளியே வந்தபோது அவருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது, அப்போது திடீரென ரத்த வாந்தி எடுத்த அவர் சாலையிலேயே சரிந்து விழுந்தார்.  இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹூதாஹூதினா என்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சுயநினைவின்றி கிடந்த பிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் பிரியாணி மையத்திற்கு சென்று  உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் பிரசாத்தின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். கடையில் பிரியாணி சாப்பிட்டு இளைஞர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!