H.Raja warns : இது தொடர்ந்தால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்... முதல்வர் மு.க. ஸ்டாலினை எச்சரித்த ஹெச். ராஜா!

By Asianet TamilFirst Published Dec 18, 2021, 8:52 AM IST
Highlights

தமிழகத்தில் மிகவும் மோசமான ஒரு நிர்வாகம், மிகவும் மோசமான அரசாங்கமாக திமுக அரசு உள்ளது. நெருக்கடி நிலையை விட மிகவும் மோசமான காட்டாச்சி, சர்வாதிகார ஆட்சி சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.

காந்தி போன்ற அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் கட்டுபடுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வேலூரில் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஸ்டாலின் இருக்கிறார். அவர் எம்.எல்.ஏ.வாக உள்ள நிலையில் மேம்பாலம், பார்க் கட்டுவதாகக் கூறி வீடுகளை அதிகாரிகள் இடிக்கிறார்கள். சொந்த தொகுதி மக்களுகே முதல்வர் ஸ்டாலின் நல்லது செய்வது கிடையாது. பிரதமர் மோடி கங்கையில் குளித்ததால் சுகாதாரமற்ற சூழலில் இருந்த கங்கை ஆறு தூய்மைபடுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி கங்கை ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி வசதிகள் ஏற்படுத்தப்படுத்தி தந்துள்ளார். இதேபோல் கொளத்தூர் தொகுதியில் உள்ள மேம்பாலம் பார்க் கட்ட 120 வீடுகளை இடிப்பதற்கு முன், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு பிறகு அதையெல்லாம் செய்யுங்கள்.

தமிழகத்தில் மிகவும் மோசமான ஒரு நிர்வாகம், மிகவும் மோசமான அரசாங்கமாக திமுக அரசு உள்ளது. நெருக்கடி நிலையை விட மிகவும் மோசமான காட்டாச்சி, சர்வாதிகார ஆட்சி சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் பலூன் விட்டு விளையாடினார்கள். நீங்கள் பிரதமரை விமர்சிக்கலாம். ஆனால், முதல்வரை விமர்சிக்க கூடாதா? மகாத்மா காந்தியின் பெயரை கெடுக்கவே காந்தி என்ற அமைச்சர் இருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தமிழக அமைச்சர்களாக உள்ளனர்.
 
நாங்கள் யாரும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி செய்து அரசியலுக்கு வரவில்லை. அண்ணாமலை ஐபிஎ.ஸ். படித்துவிட்டுதான் அரசியலுக்கு வந்துள்ளார். காந்தி போன்ற அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் கட்டுபடுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும். வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் வெள்ளித்தேர் இருந்தது. ஆனால். தற்போது மரத்தேர் மட்டும் உள்ளது. 128 கிலோ வெள்ளி அறநிலையத்துறையால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள அறநிலையத்துறை கோவிலை கொள்ளையடிக்கும் மோசமான துறையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.
 

click me!