Vijayabaskar: முடிஞ்சா கை வை... ஒடிச்சிடுவேன்... எகிறிய அதிமுக முன்னாள் அமைச்சர்...!

By manimegalai a  |  First Published Dec 18, 2021, 8:48 AM IST

அதிமுக தொண்டர்கள் மீது கை வைத்தால் கையை ஒடித்துவிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடியாக மிரட்டி இருப்பது, பேசு பொருளாக மாறி இருக்கிறது.


அதிமுக தொண்டர்கள் மீது கை வைத்தால் கையை ஒடித்துவிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடியாக மிரட்டி இருப்பது, பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Latest Videos

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய பிரமுகர்களாக உள்ளவர்களுக்கும் திமுக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளது. அவர்கள் மீதான பழைய புகார்கள், ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியல் போட்டு அதிரடி ரெய்டு நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது.

கடந்த 3 மாதங்களில் அதிமுகவில் பவர்புல்லாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு அதற்கு சான்று என்று கூறலாம். திமுகவின் இந்த அட்டாக்கை சட்ட ரீதியாக சந்திக்கும் நடவடிக்கைகளில் அதிமுக இறங்கி இருந்தாலும், அரசியல் ரீதியாக கொண்டு சென்றால் மக்கள் மத்தியில் திமுகவை நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைக்கிறது.

அதன்பலனாக தான் கடந்த சில வாரங்களாக திமுகவையும், அதன் தலைமையையும் அதிமுகவின் முக்கிய மற்றும் சீனியர் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் அதிரடியாக பேட்டி கொடுத்து அட்டாக் செய்து வருகின்றனர்.

ரெய்டை அரசியலாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக தான் மக்கள் மன்றத்தின் முன்னால் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் அதிமுக ஈடுபட்டு உள்ளது. அதில் முன்னாள் அமைச்சர்களின் தடாலடி பேச்சுகள், பேட்டிகள் அதிரிபுதிரியாக்கி இருக்கிறது.

எஸ்பி வேலுமணி ஒரு பக்கம் திமுகவையும், அதன் முக்கிய தலைவர்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். அவரையே ஓரங்கட்டும் அளவுக்கு சிவி சண்முகத்தின் பேச்சு தொடர்ந்து அதிரடியாக இருக்கிறது.

குறிப்பாக திமுக அமைச்சரவையை பற்றி அவர் பேசிய கருத்து பெரும் பேச்சாக உள்ளது. ஸ்டாலின் தலைமையில் இருப்பது அமைச்சரவையே கிடையாது. அது குற்றவாளிகள் இருக்கும் அமைச்சரவை. லஞ்ச ஒழிப்பு துறை கையில் இருப்பதால் அதிமுகவை என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று திமுக நினைக்கிறது என்று போட்டு தாக்கி இருக்கிறார்.

அதிரடியாக பேசும் ராஜேந்திர பாலாஜி தம்மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருப்பதால், அவரது இடத்தை இப்போது முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பிடித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

கரூரில் திமுக அரசை கண்டித்து, அதிமுக நடத்திய போராட்டத்தில் எம்ஆர் விஜயபாஸ்கரின் பேச்சு அப்படித்தான் இருந்திருக்கிறதாக ரத்தத்தின் ரத்தங்களே கூறி இருக்கின்றனர்.

அவர் பேசியது இதுதான்: அதிமுக தொண்டர்கள் மீது கையை வைத்தால் அவர்களது கையை ஒடிப்பேன். இது கட்டபஞ்சாயத்து ஆட்சி..இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

ஸ்டாலினுக்கு அடுத்த உதயநிதிதான்… அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் திமுகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழக மக்கள் 6 மாதங்களில் ஆட்சி மாற வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றனர் என்று போட்டு தாக்கி இருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக திமுகவுக்கு எதிரான போக்குகள், பேச்சுகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தரப்பில் இருந்து தான் வெளிப்பட்டது. ஆனால் இப்போது முன்னாள் அமைச்சர்கள் பலரிடம் இருந்து அதிரடியான பேட்டிகள், பேச்சுகள் வலம் வர ஆரம்பித்துள்ளன.

திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்சியில் தீவிரப்படுத்த வேண்டும், தொண்டர்களை அரவணைத்து வேண்டியதை செய்து தர வேண்டும் என்று தலைமையிடம் இருந்து அழுத்தம் கிடைத்திருப்பதால் தான் இதுபோன்ற அட்டாக் மற்றும் அதிரடி பேட்டிகள் தற்போது அதிகரித்துள்ளன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எதிர்ப்பு அரசியலே எல்லாவற்றையும் நிலைநிறுத்தும் என்பதை தற்போது அதிமுகவினர் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கின்றனர் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்…!!!

click me!