H. Raja: தற்கொலை செய்த மாணவியின் அப்பா திமுக... அனுதாபம் தெரிவிச்சீங்களா ஸ்டாலின்..? வம்பிழுக்கும் ஹெச். ராஜா

By manimegalai aFirst Published Jan 23, 2022, 8:56 AM IST
Highlights

இறந்து போன அரியலூர் மாணவியின் தந்தை திமுககாரர், அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று பாஜக மூத்த பிரமுகர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை: இறந்து போன அரியலூர் மாணவியின் தந்தை திமுககாரர், அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று பாஜக மூத்த பிரமுகர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ளது வடுகம்பாளையம் என்ற ஊர். இந்த ஊரில் கீழத்தெருவை சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சை திருக்க்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி என்ற ஊரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயல, மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போக, கடந்த 19ம் தேதி உயிரிழந்தார். தொடக்கத்தில் வெகு சாதாரணமாக அறியப்பட்ட இந்த சம்பவம் இப்போது தமிழகம் முழுக்க பேசப்படும் விவகாரமாக மாறி இருக்கிறது.

மாணவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு விடுதி வார்டன் சகாயமேரியை போலீஸ் கைது செய்துள்ளது. பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த மாணவியின் மரணத்தை கையில் எடுத்துள்ளன.

மாணவியை கட்டாய மதமாற்றம் செய்ய சொன்னார்கள், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றம்சாட்டி வரும் பாஜக இது தொடர்பான போராட்டங்களை முன் எடுத்து வருகிறது.

பள்ளி மீது நடவடிக்கை கட்டாயம் தேவை என்று மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த கோர்ட், மாணவியின் உடலை வாங்கி அடக்கம் செய்ய வேண்டும், மறு பிரேத பரிசோதனைக்கு அவசியம் இல்லை என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, மாணவியின் உடல் பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூறியது போன்று உடல் சொந்த ஊர் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து தந்தது.

30 போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊரான வடுகம்பாளையம் கொண்டு செல்லலப்பட்டது. அவரது வீட்டில் உடல் வைக்கப்பட, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் நேற்றிரவு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அடக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையின் காரணமாக மாணவியின் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மாணவி மறைந்துவிட்ட பின்னரும் இந்த விவகாரம் இன்னமும் அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

இப்படி தொடர்ந்து பாஜக குரல் கொடுத்து வரும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரான ஹெச் ராஜாவும் தமிழக அரசுக்கு எதிராக குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் இன்று ஒரு டுவிட்டர் பதிவையும் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் ஹெச் ராஜா கூறி இருப்பதாவது: தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை க. முருகானந்தம் திமுககாரர், நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மாணவியின் மரணத்திற்கு அனுதாபமாவது தெரிவித்தாரா? திமுகவில் இந்துக்களுக்கு இவ்வளவுதான் மரியாதை என்று உணரவும் என்று தெரிவித்துள்ளார்.

click me!