"அதிமுகவை உடைக்க சசிகலா கணவர் நடராஜனே போதும்" : கொளுத்தி போடும் எச்.ராஜா

 
Published : Apr 01, 2017, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
"அதிமுகவை உடைக்க சசிகலா கணவர் நடராஜனே போதும்" : கொளுத்தி போடும் எச்.ராஜா

சுருக்கம்

h raja says that natarajan will split admk

அதிமுகவை உடைக்க சசிகலா கணவர் நடராஜன் மட்டுமே போதும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

அண்மைய காலமாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை வேடிக்கையாக உள்ளது. அதுவும் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கட்சியில் நிலவும் அரசியல் விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கட்சி ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது.

இந்த இரண்டு அணி மட்டுமல்லாமல் அதிமுகவின் மூன்றாவதாக அணியாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா வந்துள்ளார். இவர் தனியாக ஒரு பேரவையை அமைத்துள்ளார், இவருக்கு ஆதரவாக சில தொண்டர்களும் உள்ளனர்.

இந்த சூழலில், முன்னதாக சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுக இப்படி உடைய காரணம் பாஜகத்தான் என்று கூறி இருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் தீபாவை இயக்குவது பாஜகத்தான் என்றும், தீபா, தீபக் இருவரும் எங்கள் வீட்டு பிள்ளை, பாஜக அவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்று கூறி இருந்தார்.

இது நடந்து சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் அதிமுக உடைய பாஜகத்தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் பாஜக செயல் தலைவர் எச்.ராஜா திருவாரூரில் பேட்டியில் கூறியதாவது,

அதிமுகவை உடைக்க சசிகலா கணவர் நடராஜன் மட்டுமே போதும் என்று கூறியுள்ளார்.

தீபாவை பாஜகதான் பின்னிருந்து இயக்குகிறது என்றும் "தீபா எங்கள் வீட்டு பிள்ளை, எங்களை விட்டு எங்கே போய்விடுவாள் என்று நடராஜன் கூறினார். 

ஆனால் அவருக்கு தீபா அளித்த பதில் "நடராஜன் யார் என்றே தெரியாது" என்று கூறினார்.

இது ஒரு புறம் இருக்க தீபா கணவர் மாதவன் தனி கட்சி ஆரம்பிக்க போவதாக சொன்னார். ஆனால் அதன்பிறகு நான் தீபா கூடதான் இருக்க போவதாகவும், தீபாவை முதல்வர் ஆக்குவதே என் முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.

இப்படி கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் எப்போது தீபாவின் தம்பி தீபக் தனி கட்சி ஆரம்பிக்க போறார் என்று தெரியவில்லை.

இப்படி தீபாவின் குடும்பத்துக்குள் பிரச்சனை நிலவ, மறுபுறமோ தினகரன் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கிறார். இவர் அதிமுகவின் துணை செயலாளராக இருப்பது அக்கட்சியில் யாருக்குமே பிடிக்கவில்லை. 

தினகரன் மட்டும்  தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அவர் முதல்வர் பதவிக்கு வர முயற்சி செய்வார், அப்போது எடப்பாடி அவரை எதிர்த்து கட்சியை விட்டு வெளியே வருவார், அவருடன் சில எம்.எல்.ஏக்களும் வெளியே வருவார்.

இப்படி அவர்களே தங்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாமல் இருக்கும்போது, அதிமுக கட்சியை உடைப்பதற்கு காரணம் பாஜகதான் என்று அவர்களே கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இப்படி இவர்கள் கூறுவது கணவன், மனைவி தகராறுக்கு பக்கத்து வீட்டுகாரர்தான் காரணம் என்று கூறுவதைபோல உள்ளது என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்