"பா.ஜ.க.வும் பாறையும் ஒன்னு... இதை அறியாதவன் வாயில மண்ணு!!" - ஹெச்.ராஜா தடாலடிப் பேட்டி

Asianet News Tamil  
Published : May 29, 2017, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
"பா.ஜ.க.வும் பாறையும் ஒன்னு...  இதை அறியாதவன் வாயில மண்ணு!!" - ஹெச்.ராஜா தடாலடிப் பேட்டி

சுருக்கம்

h raja says that bjp is like a rock

கால்நடை வர்த்தகத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதாகக் கூறி மத்திய அரசு புகுத்தியுள்ள புதிய நடைமுறை, நாடு முழுவதும் போராட்ட விதையை  ஆழமாக நட்டியுள்ளது. 

தான் என்ன? உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்க முடியாது என்று கூறி முதல் ஆளாக போராட்டத்தில் குதித்துள்ளது நமது அண்டை மாநிலமான கேரளம். 

தேவைப்பட்டால் மத்திய அரசின் இந்த உத்தரவை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றவும் தயார் என்று மெடுக்குடன் கூறி அதிரச் செய்திருக்கிறார்.

ஆனால் தமிழக அரசோ மருந்துக்கு கூட ஒரு கண்டன அறிக்கையை வெளியிடாமல் மெளனம் சாதித்து வருகிறது. ஆனால் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், மத்திய அரசை வகை தொகையில்லாமல் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர். 



மாட்டிறைச்சி மீதான தடை வன்மத்தோடு எடுக்கப்பட்டதா?அல்லது கால்நடைகள் வதைபடுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டதா என்ற விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா எதிர்க்கட்சிகள் மீது மிகக் காட்டமான கண்டனங்களை முன்வைத்துள்ளார். 

பா.ஜ.க.வும் பறையும் ஒன்னு - இத அறியாதவ வாயில மண்ணு என்பதைப் போல அமைந்திருக்கிறது ஹெச்.ராஜாவின் சுளீரென சுட்டுத் தள்ளுகிறது இப்பேட்டி..ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டின மாடுகள், பசுக்களைக் காப்பாற்றவே மாட்டிறைச்சி மத்திய அரசு தடைவிதித்திருப்பதாகக் கூறினார். 



இவ்விவகாரத்தில் திருமாவளவன், சீமான் ஆகியோர் கலவரப் புத்தியுடன் இருப்பதாக குற்றஞ்சாட்டிய ஹெச்.ராஜா, ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தினால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கித் தருவதாகவும் கூறினார். 

தனக்காகவும், தனது உரிமைகளை பெறுவதற்காகவும் போராடும் மக்களை, இறுதி வரை பரபரப்புடன் வைத்திருக்கும் அரசு எப்படிபட்டதாக இருக்கும்......!

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!