"ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தினால் பிரதமரை சந்திக்கலாம்" - கண்டிசன் போடும் எச்.ராஜா

Asianet News Tamil  
Published : May 29, 2017, 10:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
"ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தினால் பிரதமரை சந்திக்கலாம்" - கண்டிசன் போடும் எச்.ராஜா

சுருக்கம்

h raja condemns stalin

பாஜக பாறை போன்றது அதனுடன் மோதினால் அது மோதுபவர்களுக்கே கேடாக முடியும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிகிகை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்ன மாடுகளையும், பசுக்களையும் காப்பாற்றவே இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் மாட்டிறைச்சி தடை சட்டத்தை அரசியலாக்கும் விதத்தில் திருமாவளவனும், சீமானும் கலவரப் புத்தியுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் அவர்கள் பாஜகவுடன் மோதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், ஏனென்றால் பாஜகவுடன் மோதுவது பாறையுடன் மோதுவதற்கு சமம் என எச்.ராஜா எச்சரித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்து நடத்த அனுமதித்த டீனை சஸ்பெண்டு செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்லுவதை நிறுத்தினால், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் வாங்கித் தருவதாக எச்.ராஜா தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!