
இறை மறுப்பு, பகுத்தறிவு கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் கட்சி திமுக. திமுக தலைவர் கருணாநிதியோ, மு.க.ஸ்டாலினோ அல்லது அக்கட்சியின் மூத்த தலைவர்களோ கோவில்களுக்கு செல்வதில்லை.
ஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி, தற்போதைய செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஆகியோர் கோவில்களுக்கு செல்வர். இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு ஸ்டாலின் விளக்கமளித்திருந்தார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த ஸ்டாலின், எங்கள் குடும்பத்தில் என் தாயும் மனைவியும் கோவிலுக்கு செல்வார்கள். ஆனால் நாங்கள் அதை தடுப்பதில்லை. மற்றவர்களின் இறை வழிபாட்டிலும் நம்பிக்கையிலும் நாங்கள் தலையிடுவதில்லை. அப்படி தலையிட்டால் அது அடக்குமுறை என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, டுவீட் போட்டுள்ளார். அதில், தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று ஸ்டாலின் சொன்னது அடக்குமுறை இல்லையா? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. இரட்டை நிலை?</p>— H Raja (@HRajaBJP) <a href="https://twitter.com/HRajaBJP/status/957660181348859904?ref_src=twsrc%5Etfw">January 28, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>