ஒரு முடிவோடதான் இருக்கு தமிழக அரசு! பஸ்ல போறதே பெரிய சாகசமா இருக்குது: யார், யார் சொன்னது?

First Published Jan 29, 2018, 12:35 PM IST
Highlights
There is only one end to the Tamil Nadu Government


உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி...

*    உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன் வரவேண்டும். இது மிகவும் ஆத்மார்த்தமான செயலாகும்.
-    எடப்பாடி பழனிசாமி.

*    அரசு பேருந்துக்களில் பயணம் செய்வதென்பது உண்மையிலேயே பெரும் சாகசமாகவும், மிகப்பெரிய துன்பமாகவும் உள்ளது.
-    டாக்டர் ராமதாஸ்

*    பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என பல வரிகளை விதித்து மத்திய பி.ஜே.பி. அரசு மக்களை நசுக்கி வருகிறது. இதற்கு தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் துணை நிற்கிறது.
-    திருநாவுக்கரசர்.

*    மக்கள் ஆதரவை இழந்த அரசு ஆட்சியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. அப்படிப்பட்ட அரசுக்கு கட்டண உயர்வை அறிவிக்கும் உரிமையும் இல்லை.
-    முத்தரசன்.

*    தமிழக அரசு ஏதோ முடிவெடுத்து மக்களுக்கு எதிராக செயல்படுவது போல் தெரிகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
-    பொன்.ராதாகிருஷ்ணன்

*    ஆன்மீகத்தின் மீது  பற்று கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மடாதிபதிகள், ஜீயர்கள் போன்றோரின் செயல்கள் அமைய வேண்டும்.
-    தினகரன்.

*    மதவாத சக்திகள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளது.
-    திருமாவளவன்.

*    ஊழலை வேரறுக்க வேண்டுமென்றால் நடைமுறை சீர்திருத்தங்கள் மட்டும் போதாது. மக்களின் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
-    ராஜ்நாத் சிங்

*    வரும் ஆண்டிலாவது வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதன் மூலம் மட்டுமே வேளாண் துறை வளரும்.
-    அன்புமணி ராமதாஸ்

*    நாடு கெட்டு போச்சு, படிப்பு கெட்டு போச்சு, கல்வி கெட்டு போச்சு  என்று மாணவர்கள் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. அவர்களின் உதவி இல்லாமல் நாங்கள் செய்ய வேண்டிய எதையும் செய்ய முடியாது.
-    கமல்ஹாசன்

 

click me!