யார் பார்த்த வேலைய்யா இது … அதுல இருக்கிறது நான் இல்லை !! கதறும் எச்.ராஜா !

By Selvanayagam PFirst Published Oct 8, 2019, 7:52 AM IST
Highlights

திருச்சி நகைக்கடை கொள்ளையனுடன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இருப்பது போன்ற வெளியான ஃபோட்டோவில் இருப்பது நான் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 

திருச்சி நகைக்கடை கொள்ளையன் மணிகண்டன் எச்.ராஜாவுக்கு  மாலை அணிவிப்பது போல் சமூக வலைதளங்களில் பரவி வரும் போட்டோ மார்பிங் செய்யப்பட்டு  சமூகவலை தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் எச்.ராஜா புகார் அளித்துள்ளார்.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில்  சுவரை துளையிட்ட கொள்ளையர்கள் நகைகளை அள்ளி சென்றனர். பிடிபட்ட 3 கொள்ளையர்களில் ஒருவரான மணிகண்டன், பாஜக  தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு மாலை அணிவிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனை மறுத்துள்ள எச்.ராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் மாலை அணிவிக்கும் போட்டோவில் இருப்பது நான் அல்ல என்றும்,  திவாகரனுக்கு சால்வை அணிவிக்கும் போட்டோவை, எனக்கு அணிவிப்பது போல் மார்பிங் செய்து பரப்பிவிட்டுள்ளனர். 

காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த ஆர்.கே.நகர் சயீத் என்பவரால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை, திமுக தகவல் தொடர்பு பிரிவு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதனை திமுக எம்.எல்.ஏ., ராஜா ரீடுவிட் பண்ணியுள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ராஜா அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

click me!