மக்களே உஷார்..!! இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேர்தில் அடித்து ஊத்தப்போகிறது..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2019, 7:28 AM IST
Highlights

கோவை, ,ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும்  மற்றும் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்  மேற்கு மாவட்டம் மற்றும்கடலோர மாவட்டங்களான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தென் கிழக்கில் நிலவிவரும்  மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில்  மழைக்கு வாய்ப்புள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, ,ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும்  மற்றும் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் மேகமூட்டத்துடன் இருக்குமென்றும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும், குறைந்த வெப்பநிலை 27 டிகிரி சென்சாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  ராமநாதபுரம் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறு சென்டிமீட்டர் முதல் 16 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென் தமிழகத்தின் கடலோரப் மாவட்டங்களில் மழையின் காரணமாக கடல் காற்று வீசக்கூடும் என்றும்  இதனால் கடல் சுற்று கொந்தளிப்பாக இருக்கும் என்றும்  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

click me!