பாஜகவில் எகிறும் உறுப்பினர் சேர்க்கை... இரண்டே மாதங்களில் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு!

By Asianet TamilFirst Published Oct 8, 2019, 7:51 AM IST
Highlights

புதிய உறுப்பினர்களையும் சேர்த்து தற்போது பாஜகவில் 17.50 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் காஷ்மீர் விவகாரம்தான். பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலான நடவடிக்கையை எடுத்ததாலும் வெளியுறவு கொள்கையில் மோடியின் செயல்பாடுகளையும் பார்த்துதான் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

பாஜகவின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆறரைக் கோடி பேர் புதிதாக சேர்ந்திருப்பதாக அக்கட்சி செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜகவில் புதிய தலைவரையும், மாநிலங்களில் புதிய நிர்வாகிகளையும் டிசம்பர் மாதவாக்கில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்கான உட்கட்சி பணிகள் பாஜகவில் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதேபோல கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது.  புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்களின் புதுபிப்பு உள்பட ஒரே கட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் நடைபெற்ற இந்தப் பணியில் கூடுதல் உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு வைத்து பாஜக பணியாற்றியது.
இந்நிலையில் பாஜகவில் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் செயல் தலைர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். ஹிமாச்சல் பிரதேசம் பிலாஸ்பூரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜே.,பி.நட்டா பேசும்போது, “பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியபோது கட்சி உறுப்பினர்களின் பலம் 11 கோடியாக இருந்தது.


புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கி 55 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நாட்களில் பாஜகவில் புதிதாக 6.50 கோடி பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். புதிய உறுப்பினர்களையும் சேர்த்து தற்போது பாஜகவில் 17.50 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் காஷ்மீர் விவகாரம்தான். பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலான நடவடிக்கையை எடுத்ததாலும் வெளியுறவு கொள்கையில் மோடியின் செயல்பாடுகளையும் பார்த்துதான் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார். 

click me!