என்னை கைது செய்ய வேண்டாம்.. முன்ஜாமீன் கேட்டு கதறிய ஹெச். ராஜா.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jul 14, 2021, 6:27 PM IST
Highlights

அந்த குற்ற பத்திரிக்கையில் நான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜுலை 27-ல் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில், முன்ஜாமின் கோரிய ஹெச். ராஜாவின் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பாக  பாஜக ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்;- புதுக்கோட்டை திருமயத்தில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் விமர்சனம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமயம் போலீசார் திருமயம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்ற பத்திரிக்கையில் நான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜுலை 27-ல் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை பெரியார் திராவிட கழக வழக்கறிஞர் கண்ணன் தரப்பில் வழக்கில் தங்களையும் ஒரு எதிர்மனுதாராக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தரப்பில், பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஜூலை 16-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

click me!